Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அரசாங்கத்தில் பெரும் குழப்பம்! திண்டாடும் ஜனாதிபதி

T

The Leader Desk

மார்ச் 5, 2022 • 2:47 AM

அரசாங்கத்தில் பெரும் குழப்பம்! திண்டாடும் ஜனாதிபதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுகூட்டம் நடத்தி நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை விமர்சித்ததை அடுத்து, குறித்த இருவரும் பதவி நீக்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் தாம் அமைச்சரவைக்கு வரப் போவதில்லை என்றும் பசில் ராஜபக்ச ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.
  • இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
  • இதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்பை வெளியிட்டாலும், இறுதியில் குறித்த இருவரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
எழுத்து அளவு:

பொதுகூட்டம் நடத்தி நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை விமர்சித்ததை அடுத்து, குறித்த இருவரும் பதவி நீக்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் தாம் அமைச்சரவைக்கு வரப் போவதில்லை என்றும் பசில் ராஜபக்ச ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

இதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்பை வெளியிட்டாலும், இறுதியில் குறித்த இருவரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.

வாசுதேவ நாணயக்காரவின் பதவி பறிக்கப்படவிருந்த போதிலும் பின்னர் அந்தத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது,

எவ்வாறாயினும், விமல், கம்மன்பில ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டால் தானும் அமைச்சுப் பணிகளை முன்னெடுக்கப் போவதில்லை என்று வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அத்துடன், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரின் தரப்பினர் இன்னமும் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களாகவும், எம்.பிக்களாகவும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் எப்போது காலால் இழுப்பார்கள் என்பது குறித்த சந்தேகம் ஆளும் தரப்பில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதுகுறித்து இன்று சனிக்கிழமை விசேட கூட்டமொன்றையும் நடத்தவுள்ளது.

தற்போது அமெரிக்கர் வசமும், குடும்ப வசமும் நாடு சென்றுள்ளதாகவும் இது மிகவும் ஆபத்தானது எனவும் விமல் - கம்மன்பில தரப்பினர் விமர்சித்துள்ளனர்.

நாட்டில் பொதுமக்கள் வீதிகளில் திண்டாடி வரும் நிலையில், விமல் - பசில் அதிகாரப் போட்டி ஜனாதிபதிக்கு தலையிடியாக மாறியுள்ளது, இதனால் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் ஜனாதிபதி திண்டாடிக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், விமல் தரப்பினரை பதவி நீக்கம் செய்தமைக்கு மகிந்த ராஜபக்சவும் அதிருப்தியை வெளியிட்டு அவரும் ஒரு பக்கத்திற்கு சென்றுள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...