Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இளைஞர் படையைத் திரட்டி திட்டம் வகுக்கும் ரணில்

T

The Leader Desk

மார்ச் 5, 2022 • 2:36 AM

இளைஞர் படையைத் திரட்டி திட்டம் வகுக்கும் ரணில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறிப்பாக தற்போது ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணியை (டொலர்களை) எவ்வாறு ஈர்த்துக் கொள்வது என்பது குறித்து முன்னாள் பிரதமர் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  • மார்ச் 25ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை இளைஞர்களைக் கொண்டு கட்டியமைக்கும் பணிகள் உள்ளக ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

குறிப்பாக தற்போது ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணியை (டொலர்களை) எவ்வாறு ஈர்த்துக் கொள்வது என்பது குறித்து முன்னாள் பிரதமர் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை இளைஞர்களைக் கொண்டு கட்டியமைக்கும் பணிகள் உள்ளக ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பொதுமக்களின் கவனத்தையும், அரசாங்கத்தையும் வலியுறுத்தி சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த செயற்குழு உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

'இன்று நாம் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து நாட்டை விடுவித்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் அனைவரும் பொதுவான உடன்பாட்டுக்கு வருவோம்' என்ற தொனிப்பொருளில் இந்த சத்தியக் கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான சத்தியாகிரகப் போராட்டத்திற்கு இணக்கப்பாட்டுக்கு வர விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அண்மையில் முன்னாள் பிரதமர் சிறிகொத்த தலைமையில் இது தொடர்பான விளக்கமளிக்கும் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

அத்துடன், தற்போதைய பிரச்சினைக்கு ஏனைய எதிர்க்கட்சிகள் சரியான முறையில் திட்டங்களை வகுக்க வில்லை என்றும் அதனால் இளைஞர்களுக்கான அடித்தளத்தையிட்டு, தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தைத் தான் வகுத்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இளைஞர்களை பயிற்றுவிக்கும் வேலைத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செயற்குழுவின் அந்த உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...