Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தினேஸ் மறுத்த அமைச்சுப் பதவியை ஏற்ற எஸ்.பீ.

T

The Leader Desk

மார்ச் 4, 2022 • 2:35 AM

தினேஸ் மறுத்த அமைச்சுப் பதவியை ஏற்ற எஸ்.பீ.

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கல்வி அமைச்சுக்குப் பதிலாக கைத்தொழில் அமைச்சை ஏற்குமாறு தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு மகிந்த ராஜபக்ச எதிர்ப்பு தெரிவித்ததாகவும், எனினும், விமல் வீரவங்ச நீக்கப்படாவிட்டால் தான் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
  • எனினும், இதனை அவர் மறுத்துள்ளார்.
எழுத்து அளவு:

கல்வி அமைச்சுக்குப் பதிலாக கைத்தொழில் அமைச்சை ஏற்குமாறு தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை அவர் மறுத்துள்ளார். இதன்பின்னர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு இந்தப் பதவியை வழங்கலாம் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

விமல் வீரவங்சவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதற்கான கடிதத்தை ஜனாதிபதி வெளியிட்டுள்ள நிலையில், அந்தக் கடிதத்தை தனது முகநூலில் பிரசுரித்துள்ள விமல் வீரவங்ச 'நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

Wimal 2022 1

எவ்வாறாயினும், விமல் வீரவங்சவை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கு மகிந்த ராஜபக்ச எதிர்ப்பு தெரிவித்ததாகவும், எனினும், விமல் வீரவங்ச நீக்கப்படாவிட்டால் தான் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மகிந்த ராஜபக்ச அந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துவிட்டதாகவும், இதன்பின்னரே விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரை நீக்குவதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், விமல் வீரவங்ச மக்களைக் கவரும் வகையில் பேசக் கூடியவர் என்றும் அவ்வாறான ஒரு பேச்சாளர் எம்மோடு இருக்க வேண்டும் என்றும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவங்சவை நீக்கியதன் பின்னர், எந்தப் பிரச்சினையையும் பேசி சமாளிக்கும் எஸ்.பீ. திஸாநாயக்கவிற்கு இந்தப் பதவியை வழங்கலாம் என்ற சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தினேஸ் மறுத்த அமைச்சுப் பதவியை ஏற்ற எஸ்.பீ. | Tamil Leader | We Lead the Nation