Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

கர்த்தினால் சர்வதேசத்திடம் நீதி கோரல்

T

The Leader Desk

மார்ச் 4, 2022 • 3:02 AM

கர்த்தினால் சர்வதேசத்திடம் நீதி கோரல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • 'ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல்" தொடர்பில் கொழும்பு பேராயர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளார்.
  • கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மார்ச் 2ஆம் திகதி இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில், சுமார் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
  • கர்தினால் ஜெனீவா செல்வதற்கு முன் வத்திக்கானில், 'போப் பிரான்சிஸ்" உடனான சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
எழுத்து அளவு:


'ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல்" தொடர்பில் கொழும்பு பேராயர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மார்ச் 2ஆம் திகதி இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில், சுமார் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

கர்தினால் ஜெனீவா செல்வதற்கு முன் வத்திக்கானில், 'போப் பிரான்சிஸ்" உடனான சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கத்தோலிக்க திருச்சபை கர்தினால் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த செய்தியாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தால் அது நடத்தப்படாது என்றும், அது குறித்து எதிர்காலத்தில் தெரிவிக்கப்படும் என்று கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கூறியதாக, ஒரு கிறிஸ்தவ செய்தி இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது.

image 1

02 8

 

 

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...