Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பராலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள ரஷ்யாவிற்கு தடை - சர்வதேச பராலிம்பிக் குழு

T

The Leader Desk

மார்ச் 3, 2022 • 12:32 PM

பராலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள ரஷ்யாவிற்கு தடை - சர்வதேச பராலிம்பிக் குழு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், 'பராலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என சர்வதேச பராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
  • சர்வதேச ஒலிம்பிக்குழு மற்றும் சர்வதேச டென்னிஸ் அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து எதிர்க்காத்தில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுடன் போட்டியிடாமல் இருப்பதற்கு உக்ரைன் டென்னிஸ் நட்சத்திரம் எலினா ஸ்விடோலினா முடிவு செய்துள்ளார்.
  • மற்ற உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச பாராலிம்பிக் குழுத் தலைவர் என்ரு பார்சன்ஸ் தெரிவித்தார்.
எழுத்து அளவு:


அதன் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், 'பராலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என சர்வதேச பராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

மற்ற உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச பாராலிம்பிக் குழுத் தலைவர் என்ரு பார்சன்ஸ் தெரிவித்தார்.

மேலும் உக்ரையின் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு சர்வதேச ஒலிம்பிக்குழு (IOC), சர்வதேச டென்னிஸ் சம்மேளனம்(ITA), கால்பந்தாட்ட சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FIFA) மற்றும் ஐரேப்பிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் ஒன்றியம் (UEFA) என்பன எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

மேலும் இப் போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளையும் சர்வதேச போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் இணைத்துக்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் சகல நாடுகளிலும் உள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக்குழு மற்றும் சர்வதேச டென்னிஸ் அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து எதிர்க்காத்தில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுடன் போட்டியிடாமல் இருப்பதற்கு உக்ரைன் டென்னிஸ் நட்சத்திரம் எலினா ஸ்விடோலினா முடிவு செய்துள்ளார்.

மேலும் போர் குறித்த எலினாவின் கருத்துக்கு மதிப்பளித்து, ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரமான அண்ட்ரே ரூப்லெவ் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு ரஷ்யாவை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ரஷ்யாவில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளை நடத்துவதற்கும் ரஷ்யாவின் தேசியகொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு பீபா (FIFA) மற்றும் ஐரேப்பிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் ஒன்றியம் (UEFA) தடை விதித்துள்ளன.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...