Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

'பரசிட்டமோல் மாத்திரை விலை உயர்வு" - விசேட வர்த்தமானி அறிவித்தல்

T

The Leader Desk

மார்ச் 3, 2022 • 10:06 AM

'பரசிட்டமோல் மாத்திரை விலை உயர்வு" - விசேட வர்த்தமானி அறிவித்தல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னதாக பரசிட்டமோல் மாத்திரையின் விலை ரூ.1.71 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • நாட்டில் அத்தியாவசிய மருந்துகள் 6 வாரங்களுக்கு கிடைக்கும் இதேவேளை, எதிர்வரும் மூன்று அல்லது ஆறு வாரங்களில் நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக, இலங்கை மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாததே இந் நிலைமைக்கு முக்கியக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
  • கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஞ்சீவ விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:


முன்னதாக பரசிட்டமோல் மாத்திரையின் விலை ரூ.1.71 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அத்தியாவசிய மருந்துகள் 6 வாரங்களுக்கு கிடைக்கும் இதேவேளை, எதிர்வரும் மூன்று அல்லது ஆறு வாரங்களில் நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக, இலங்கை மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அத்தியாவசிய மருந்துகள் இன்னும் சில வாரங்களில் காலாவதியாகவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சஞ்சீவ விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாததே இந் நிலைமைக்கு முக்கியக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஞ்சீவ விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

சரக்கு போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற உலகளாவிய பிரச்சினைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...