Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

'எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது" - எரிசக்தி அமைச்சு

T

The Leader Desk

மார்ச் 3, 2022 • 9:03 AM

'எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது" - எரிசக்தி அமைச்சு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், இன்றைய தினத்திலிருந்து அது வழமைக்கு திரும்பும் எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
  • மேலும், 37,300 மெற்றிக் தொன் டீசல் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
  • தாமதமின்றி எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
  • மேலும், மின் உற்பத்திக்காக சுமார் 8,000 மெற்றிக் தொன் டீசல் வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ள போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் நாடு முழுவதும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

 

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், இன்றைய தினத்திலிருந்து அது வழமைக்கு திரும்பும் எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருள் சேகரிப்பதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், 37,300 மெற்றிக் தொன் டீசல் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாமதமின்றி எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், மின் உற்பத்திக்காக சுமார் 8,000 மெற்றிக் தொன் டீசல் வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ள போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் நாடு முழுவதும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு பின்னர் எவ்வித தடையுமின்றி மின்சார விநியோகம் மேற்கொள்ளப்படும், என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் இன்று முதல் முறையாக மக்களிடம் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாகவும், மின் தடைக்கான காரணத்தை கண்டறிவதே இதன் நோக்கம் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது" - எரிசக்தி அமைச்சு | Tamil Leader | We Lead the Nation