Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

விரைவில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு!

T

The Leader Desk

மார்ச் 2, 2022 • 3:45 PM

விரைவில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வங்கிகள் கடன்பத்திரம் வழங்க மறுப்பதாகவும், கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த நிலை நீடிப்பதாகவும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த நிலை நீடிக்குமாயின் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
  • மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 25 முதல் 30 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வங்கிகள் கடன்பத்திரம் வழங்க மறுப்பதாகவும், கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த நிலை நீடிப்பதாகவும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலர்கள் இல்லை எனக் கூறி கடன் பத்திரங்களை வழங்க மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலர் நெருக்கடிகளினால் இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலை நீடிக்குமாயின் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தற்போதைய நிலையை சரியாக கையாளத் தவறினால் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களையும் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 25 முதல் 30 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மருந்துப் பொருட்கள், எரிபொருட்கள், உற்பத்தி மூலப் பொருட்கள் ஆகியவற்றுக்கு இறக்குமதியின் போது முன்னுரிமை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது,

எனினும், மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கூட முடியாமல் இருப்பதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விரைவில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு! | Tamil Leader | We Lead the Nation