Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைக்க மத்திய வங்கி யோசனை!

T

The Leader Desk

பிப்ரவரி 27, 2022 • 9:45 AM

இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைக்க மத்திய வங்கி யோசனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான யோசனையொன்றை ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
  • பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் செலுத்த வேண்டிய கடன் தொகை 56 ஆயிரம் கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, அரச வங்கிகள் இரண்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்து கடன் வழங்கினால், வங்கிகள் இரண்டின் வீழ்ச்சியை தடுப்பது கடினமாகிவிடும்.
  • இந்த யோசனையிலேயே மத்தியவங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார்.எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
எழுத்து அளவு:

டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான யோசனையொன்றை ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்த யோசனையிலேயே மத்தியவங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார்.எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் செலுத்த வேண்டிய கடன் தொகை 56 ஆயிரம் கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, அரச வங்கிகள் இரண்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்து கடன் வழங்கினால், வங்கிகள் இரண்டின் வீழ்ச்சியை தடுப்பது கடினமாகிவிடும்.

அந்த இரண்டு வங்கிகளிடமிருந்தும் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்தவும் மத்திய வங்கி யோசனை முன்வைத்துள்ளது.இது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்பதால், உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

எரிபொருள் விற்பனையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைப்பதற்காக எரிபொருள் விலையை அதிகரிக்குமாறும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளது.வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது.

இதன்படி, நிறுவனங்களின் செயற்பாடுகளை காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.30 மணிவரை தொடரவும் யோசனைகள முன்வைக்கப்பட்டுள்ளது.நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலை செய்வதற்கும் முன்னதாக வீட்டிற்குச் செல்லும் திட்டத்தையும் மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

தனிப்பட்ட வாகனங்கள் பயன்படுத்துவதை குறைத்து பொதுப் போக்குவரத்தில் மக்களை திருப்பிவிடவும் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.இதேவேளை, ஏற்பட்ட நெருக்கடி நிலை மற்றும் எரிபொருளை சிக்கமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பாரிய ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கி முன்வைத்துள்ள யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைக்க மத்திய வங்கி யோசனை! | Tamil Leader | We Lead the Nation