Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

“உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம்” - நேட்டோ அதிரடி

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2022 • 12:19 PM

“உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம்” - நேட்டோ அதிரடி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதுகுறித்து “தங்களுக்கு எந்த நாடும் உதவவில்லை.
  • இதற்கிடையே பிரான்ஸ் தனது 500 படை வீரர்களை ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது.
  • நேட்டோ படைக்கு வலுச் சேர்ப்பதற்காக 500 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்து உள்ளது.
  • இவ்வாறு ஐரோப்பா கண்டத்தில் ஆரம்பித்துள்ள இந்த போர் சூழல் தொடருமானால் அது 3 ஆம் உலகபோராக தோற்றம் கொள்ளும் அபாயம் அதிகமாகும்.
எழுத்து அளவு:


இதுகுறித்து “தங்களுக்கு எந்த நாடும் உதவவில்லை. தாக்குதலை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன” என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்தார்.


உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் உக்ரைனை ஆக்ரோ‌ஷமாக தாக்கி வரும் ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோவும் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.


இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவோம் என்று நேட்டோ படை தெரிவித்து உள்ளது.
இது குறித்து நேட்டோ படையின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோன் பெர்க் கூறியதாவது,


“உக்ரைன் அரசை கவிழ்க்க ரஷ்யா முயற்சித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

நிலம், வான்வெளி, கடல் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகளை நேட்டோ பிராந்தியத்தில் நிலை நிறுத்தி வருகிறோம். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அதிக அளவில் வழங்க முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.


இதற்கிடையே பிரான்ஸ் தனது 500 படை வீரர்களை ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது. நேட்டோ படைக்கு வலுச் சேர்ப்பதற்காக 500 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்து உள்ளது.


அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரஷ்யா போரை தொடுத்து வருகிறது.


உக்ரைனுக்கு உதவினால் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என புடின் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அணு ஆயுத பலத்தை தன்வசம் கொண்ட ரஷ்யாவுடன் மோதுவதை உலக நாடுகள் விரும்பவில்லை என்றாலும் உக்ரைனின் தற்போதைய நிலையை கண்டுக்கொள்ளமால் இருப்பதும் செய்யமுடியாத ஒன்று.


இவ்வாறு ஐரோப்பா கண்டத்தில் ஆரம்பித்துள்ள இந்த போர் சூழல் தொடருமானால் அது 3 ஆம் உலகபோராக தோற்றம் கொள்ளும் அபாயம் அதிகமாகும். இதனை தடுக்கவே ஐ.நா கடுமையான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...