Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மஹிந்தானந்தவுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கை தொடர விசாரணை ஆணைக் குழு முடிவு!

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2022 • 10:48 AM

 மஹிந்தானந்தவுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கை தொடர விசாரணை ஆணைக் குழு  முடிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த வழக்கு நேற்று 25 ஆம் திகதி கொழும்பு மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தனது இறுதி நிலைப்பாட்டினை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு மன்றுக்கு அறிவித்தது.
  • கடந்த 8 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கினை முன்னெடுத்து செல்வதா இல்லையா என தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
  • இவ்வழக்கில் பிரதிவாதிகள் இருவர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
  • அதன்படி விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்றம், எதிர்வரும் மே 10 ஆம் திகதி முதல் சாட்சி விசாரணைகளுக்கு திகதி குறித்து வழக்கின் முதல் சாட்சியாளருக்கு அறிவித்தலும் அனுப்பியது.
எழுத்து அளவு:

இந்த வழக்கு நேற்று 25 ஆம் திகதி கொழும்பு மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தனது இறுதி நிலைப்பாட்டினை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு மன்றுக்கு அறிவித்தது.

முன்னாள் விளையட்டுத் துறை அமைச்சரும் தற்போதைய விவசாய அமைச்சருமான அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிராக அரச பணத்தை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கினை முன்னெடுத்து செல்வதா இல்லையா என தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

நீதிபதிகளான அமல் ரணராஜா, பிரதீப் ஹெட்டி ஆரச்சி மற்றும் மகேஷ் வீரமன் ஆகிய நீதிபதிகள் முன் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் பிரதிவாதிகள் இருவர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணைகளின் போது மன்றில் ஆஜராகிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபாஷினி சிறிவர்தன, இந்த வழக்கினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதென ஆணைக் குழு தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.

அதன்படி விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்றம், எதிர்வரும் மே 10 ஆம் திகதி முதல் சாட்சி விசாரணைகளுக்கு திகதி குறித்து வழக்கின் முதல் சாட்சியாளருக்கு அறிவித்தலும் அனுப்பியது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மஹிந்தானந்தவுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கை தொடர விசாரணை ஆணைக் குழு முடிவு! | Tamil Leader | We Lead the Nation