Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அணு ஆயுதத்தை கொண்டு உலக நாடுகளை மறைமுகமாக மிரட்டும் புடின் - ஐ.நாவிலும் வெற்றி!

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2022 • 9:34 AM

அணு ஆயுதத்தை கொண்டு உலக நாடுகளை மறைமுகமாக மிரட்டும் புடின் - ஐ.நாவிலும் வெற்றி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • “உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுக்கம் விதத்தில் எந்தவொரு நாடும் நேரடியாக நம் நாட்டைத் தாக்கினால் தோல்வியையும், பயங்கரமான விளைவுகளையும் (அணு ஆயுத தாக்குதல்) சந்திக்க நேரிடும்”.
  • இதில்,உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பைக் கண்டிக்கும் தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
  • இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
  • இதன்படி பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருந்தாலும் வீட்டோ அதிகாரம் பெற்ற 5 நாடுகளின் எவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்தத் தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:


“உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுக்கம் விதத்தில் எந்தவொரு நாடும் நேரடியாக நம் நாட்டைத் தாக்கினால் தோல்வியையும், பயங்கரமான விளைவுகளையும் (அணு ஆயுத தாக்குதல்) சந்திக்க நேரிடும்”. என புடின் கூறி உள்ளார்.
இராணுவ விவகாரங்களை பொறுத்தமட்டில், சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னரும், அதன் திறன்களில் கணிசமான பகுதிகளை இழந்தபிறகும், இன்றைய ரஷ்யா மிகவும் பலம்வாய்ந்த அணுசக்தி நாடுகளில் ஒன்றாக உள்ளது.


ராஷ்யாவின் இந்த இராணுவ பலம் உலக நாடுகளை பீதியடைய செய்துள்ளது என்பது நிதர்சனம்.
இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.


நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


இதில்,உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பைக் கண்டிக்கும் தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எனினும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.


இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதன்படி பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருந்தாலும் வீட்டோ அதிகாரம் பெற்ற 5 நாடுகளின் எவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்தத் தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.


193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் இப்போது வரைவுத் தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் , ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படும் சிறப்பு அதிகாரத்தை கொண்டுள்ளன.


இதனிடையே, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை தண்டிக்கும் நோக்கில் புதிய பொருளாதார தடைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.


ஏற்கனவே இரு நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை இந்த வாரத்தொடக்கத்தில் விதித்த நிலையில் ரஷ்யாவின் 4 பெரிய வங்கிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறோம். அமெரிக்காவில் உள்ள அவர்களின் ஒவ்வொரு சொத்தும் முடக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரில், ரஷியா இன்று 3 ஆவது நாளாக அதிகாலை முதல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றது.


அங்கு ரஷ்ய படைகள் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யாவின் குண்டு மழைக்கு பயந்து உக்ரைன் மக்கள் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.


இந்நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “போர் நிறுத்தம், அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாரக உள்ளது. பேச்சுவார்த்தையை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷியா ஆலோசித்துவ் வருகிறது’ என்றார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அணு ஆயுதத்தை கொண்டு உலக நாடுகளை மறைமுகமாக மிரட்டும் புடின் - ஐ.நாவிலும் வெற்றி! | Tamil Leader | We Lead the Nation