Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

டோர்ச் லைட்டை சர்ச்சை - விசாரணைக்கு முகங்கொடுக்க தயார் என்கிறார் ஹரீன்

T

The Leader Desk

பிப்ரவரி 25, 2022 • 11:00 AM

டோர்ச் லைட்டை சர்ச்சை - விசாரணைக்கு முகங்கொடுக்க தயார் என்கிறார் ஹரீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனினும் இதற்கு பதில் அளித்த ஹரீன் பெர்ணான்டோ, சபையில் தற்போது மின்வெட்டு இடம்பெறுவதால் அதனை கொண்டு வருவது தவறு அல்ல.
  • அதற்கு நான் ஒத்துழைப்பு வழங்க தயார்.
  • மலசலக் கூடத்திற்கு செல்லும் போது மின்சாரம் தடைப்பட்டால் இது தேவைப்படும்.
எழுத்து அளவு:

இதன்போது சபையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன், டோச் லைட்டுகள் பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருள் என்றும், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

எனினும் இதற்கு பதில் அளித்த ஹரீன் பெர்ணான்டோ, சபையில்  தற்போது மின்வெட்டு இடம்பெறுவதால் அதனை கொண்டு வருவது தவறு அல்ல. மலசலக் கூடத்திற்கு செல்லும் போது மின்சாரம் தடைப்பட்டால் இது தேவைப்படும்.

அதனால்தான் டொச் லைட்டை கொண்டு வந்துள்ளேன் என்றார்.இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட சபை முதல் தினேஸ் குணவர்தன,பாராளுமன்றத்தில் மின்தடைப்பட்டால் அது சட்டவிரோத செயற்பாடாகவே அமையும். இதனை உடனடியாக தடை செய்யுமாறும் இது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில்  விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே ஹரீன் பெர்ணான்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் உரையாற்றிய அவர், நான் பாராளுமன்றத்திற்கு ஏதோவொரு பொதியை எடுத்து வந்ததாக சபாநாயகர், சபை முதல்வர் ஆகியோர் கூறியுள்ளனர்.

நான் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாகவும்  சபாநாயகர் கூறியுள்ளார். இதனால் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் என்னைப் பற்றி விசாரணை நடத்துங்கள். அதற்கு நான் ஒத்துழைப்பு வழங்க தயார்.

பாராளுமன்றத்திற்குள் ஏதேனும் பொருளை கொண்டு வரும் போது, எவருக்கும் பாதிப்பு இன்றி கொண்டு வந்த பொருள் தொடர்பிலுயே கதைக்கின்றனர். நான் சிறிய விளையாட்டு டோர்ச் லைட் ஒன்றையே கொண்டு வந்தேன். அதில் ஒன்றும் கிடையாது. இதனால் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு நான் கேட்கின்றேன்.இதேவேளை அடுத்தவாரமும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கான ஒரு விடயத்தை செய்யவுள்ளேன். அதற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும், பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமையை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுகின்றேன் என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...