Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மன்னார் மனித புதைகுழி : விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்!

T

The Leader Desk

பிப்ரவரி 25, 2022 • 6:37 AM

மன்னார் மனித புதைகுழி : விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2018 மே மாதம் மன்னார் சதொச தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் ஒரு வருடத்தின் பின்னர், இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் நிறுத்தப்பட்டன.
  • எனினும், ஒவ்வொரு நாளிலும் 10 பேர் மட்டுமே அகழ்வாராய்ச்சியில் நேரில் கலந்து கொள்ள முடியும் எனவும் மற்றவர்கள் 30 மீட்டர் தொலைவில் இருந்துள அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தைப் பார்வையிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
  • ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு மணி நேரமும் 10 நிமிடங்களுக்கு அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் சென்று செய்தி சேகரிக்க நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • மன்னார் சதொச மனித புதைகுழியில் குற்றச் செயல் நடந்த இடம் என தீர்மானித்து அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச 190வது நாள் விசாரணையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

மன்னார் மனித புதைகுழியில் 28 சிறுவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு மன்னார் மேல் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி உத்தரவிட்டது.

மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2018 மே மாதம் மன்னார் சதொச தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் ஒரு வருடத்தின் பின்னர், இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் நிறுத்தப்பட்டன. எவ்வாறாயினும், இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு கடத்தப்பட்ட பின்னர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரும் வரை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

காணாமற்போனவர்களின் உறவினர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இது தொடர்பில் ஆராய்ந்து தடையை நீக்கி உத்தரவிட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சட்டத்தரணி ரணிதா ஞானராஜின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் ஆர்.சுவதிகா ஆகியோரும், காணாமல் போனோர் அலுவலகம் (ஓ.எம்.பி) சார்பாக சட்டத்தரணி பூரத்தனி சிவலிங்கமும் ஆஜராகினர். காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது சட்டத்தரணிகள் விசாரணையில் கலந்து கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததுள்ளது.

எனினும், ஒவ்வொரு நாளிலும் 10 பேர் மட்டுமே அகழ்வாராய்ச்சியில் நேரில் கலந்து கொள்ள முடியும் எனவும் மற்றவர்கள் 30 மீட்டர் தொலைவில் இருந்துள அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தைப் பார்வையிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு மணி நேரமும் 10 நிமிடங்களுக்கு அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் சென்று செய்தி சேகரிக்க நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவானின் நேரடிக் கட்டுப்பாட்டில் சட்டத்தரணிகள், பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் அகழ்வுப் பணிகளை துரிதப்படுத்தி முடிக்குமாறும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இடம்பெற்று வரும் பாரிய புதைகுழி விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான முதல் அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும், பின்னர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வவுனியா மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் சதொச மனித புதைகுழியில் குற்றச் செயல் நடந்த இடம் என தீர்மானித்து அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச 190வது நாள் விசாரணையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புளோரிடாவின் மியாமியை தளமாகக் கொண்ட பீட்டா அனலிட்டிக்ஸ், மன்னார் சதொச புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட ஆறு எலும்புகளை ஆய்வு செய்து அவை கி.பி 1404 மற்றும் 1635 க்கு இடைப்பட்டவை என முடிவு செய்திருந்தது.

இந்த முடிவை களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பட்டதாரித் துறையின் பேராசிரியர் ராஜ் சோமதேவினால் கடுமையாக நிராகரிக்கப்பட்டதையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மனிதப் புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தொல்பொருட்கள் குறித்து புதிய விசாரணைகள் தொடங்கப்படன இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புகளில் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்ததோடு, ஒன்றாகக் கட்டப்பட்டதைப் போன்ற எலும்புகளும் வெகுஜன புதைகுழியில் காண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...