Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

"ஆண்டகை கூறுவதை போன்று அரசாங்கம் எதையும் மறைக்கவில்லை" - ரமேஷ் பத்திரண

T

The Leader Desk

பிப்ரவரி 23, 2022 • 7:00 AM

 "ஆண்டகை கூறுவதை போன்று அரசாங்கம் எதையும் மறைக்கவில்லை" - ரமேஷ் பத்திரண

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்தோடு குறித்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 22 பகுதிகள் அடங்கிய முழுமையான அறிக்கை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் , அதற்கான கோரிக்கைகளை விடுத்த போதிலும் , எவ்வித பதிலும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.
  • பேராயர் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை 22 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சகல அறிக்கைகளும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
  • https://bit.ly/3uHGkH6 16 17 18 19 20 21 22.
எழுத்து அளவு:

கடந்த வாரம் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் கருத்து வெளியிட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை , 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட பல சாட்சிகளை அரசாங்கமும் , சட்டமா அதிபர் திணைக்களமும் இணைந்து மறைத்துள்ளன.' என்று குற்றஞ்சுமத்தினார்.

அத்தோடு குறித்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 22 பகுதிகள் அடங்கிய முழுமையான அறிக்கை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் , அதற்கான கோரிக்கைகளை விடுத்த போதிலும் , எவ்வித பதிலும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.

பேராயர் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை 22 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையதும் , தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியதுமான பகிரங்கப்படுத்த முடியாத சில தகவல்கள் மாத்திரமே ஜனாதிபதியிடம் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண , இதனுடன் தொடர்புடைய எந்தவொரு விடயங்களையும் மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாகவே செயற்படுகிறது. எந்த வகையிலும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ அதில் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சகல அறிக்கைகளும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதே போன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தெரிவித்துள்ளமைக்கமைய தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவமுடைய சில காரணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தகவல்களும் பாராளுமன்றத்திற்கும் ஏனைய அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

 

14

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

15

https://bit.ly/3uHGkH6

16

 

17

18 19

20

21 22

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

"ஆண்டகை கூறுவதை போன்று அரசாங்கம் எதையும் மறைக்கவில்லை" - ரமேஷ் பத்திரண | Tamil Leader | We Lead the Nation