Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஊடகவியலாளர் சமுதிதவுக்கு பாதுகாப்பு வழங்காதது ஏன் - சஜித் கேள்வி!

T

The Leader Desk

பிப்ரவரி 22, 2022 • 12:46 PM

 ஊடகவியலாளர் சமுதிதவுக்கு பாதுகாப்பு வழங்காதது ஏன் - சஜித் கேள்வி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சமுதிதாவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
  • சம்பவத்தன்று நள்ளிரவு 12.00 மணியளவில் பொலிஸார் சமுதிதவின் வீட்டிற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அப்பகுதியில் பொலிஸார் ரோந்துப் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
  • இதேவேளை, சம்பவ தினத்தன்று 92 சிசிடிவி கமெராக்களில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்டு அவதானிக்கப்படுவதாகவும், தெளிவில்லாத சில காட்சிகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • எவ்வாறாயினும், இதற்கு பதில் அளித்த சஜித்த பிரேமதாச தமது கட்சி ஒருபோதும் நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை எனவும் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பது தவறானது எனவும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சமுதிதாவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

பிலியந்தலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக சமுதிதவுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகாரசபையிடம் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்.

எனினும் குறித்த வழிகாட்டுதல் கிடைக்கும் வரை சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீரசேகர தெரிவித்தார். சம்பவத்தன்று நள்ளிரவு 12.00 மணியளவில் பொலிஸார் சமுதிதவின் வீட்டிற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அப்பகுதியில் பொலிஸார் ரோந்துப் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, சம்பவ தினத்தன்று 92 சிசிடிவி கமெராக்களில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்டு அவதானிக்கப்படுவதாகவும், தெளிவில்லாத சில காட்சிகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வு நடைபெறவுள்ள நிலையில் அரசியல் இலபாத்திற்காக ஊடக சுதந்திரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார்.

எவ்வாறாயினும், இதற்கு பதில் அளித்த சஜித்த பிரேமதாச தமது கட்சி ஒருபோதும் நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை எனவும் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பது தவறானது எனவும் தெரிவித்தார்.

கடந்த 14ம் திகதி ஊடகவியலாளர் சமுதித்தவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்நிலையில் தமக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென ஊடகவியலாளர் சமுதித்த பிலியந்தல நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்த போதிலும் தமக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சமுதித்த குற்றம் சுமத்தியிருந்தார்.

இன்று பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் இன்று கேள்வி எழுப்பிய நிலையில் நேற்று இரவு ஊடகவியலாளர் சமுதிதவின் இல்லத்தில் சில பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...