Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி ஐந்தாவது வருடமாகவும் தொடரும் போராட்டம்!

T

The Leader Desk

பிப்ரவரி 22, 2022 • 9:53 AM

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி ஐந்தாவது வருடமாகவும் தொடரும் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடும் மழையையும் பொருட்படுத்தாது ஐந்தாவது வருடமாகவும் தமது உறவுகளுக்காக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தாய்மார்கள் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய டிப்போ சந்தி வரை பேரணியாகச் சென்றனர்.
  • இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவினர்கள் தொடர்பில் நாம் கேட்கின்றோம்.
  • இந்த நாட்டில் அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதாலேயே நாம் சர்வதேச தஞ்சம் கோருகின்றோம் என அவர்கள் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

கடும் மழையையும் பொருட்படுத்தாது ஐந்தாவது வருடமாகவும் தமது உறவுகளுக்காக நீதி கோரி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தமிழ் தாய்மார்கள் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய டிப்போ சந்தி வரை பேரணியாகச் சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள், வெகுஜன அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டதாக வன்னியில் உள்ள ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

"குடும்பங்களாக தஞ்சமடைந்து கைது செய்யப்பட்ட எங்கள் உறவினர்கள் எங்கே?"''இராணுவமே உடனடியாக வெளியேறு''"எங்கள் நிலங்களை எங்களுக்குக் கொடு"இராணுவ மயமாக்கலுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. “யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் யுத்தத்தில் எமது உறவினர்கள் இறந்ததாகத் தொடர்ந்தும் பொய் கூறி வருகின்றனர்.

இந்த நாட்டில் அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதாலேயே நாம் சர்வதேச தஞ்சம் கோருகின்றோம் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த கிளிநொச்சி டிப்போ சந்தியில் வைத்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைப்பதற்காகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மனுவொன்று வேலன் சுவாமியிடம் கையளிக்கப்பட்டது.“இறுதிப் போரில் இறந்தவர்கள் பற்றி நாங்கள் கேட்கவில்லை.

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவினர்கள் தொடர்பில் நாம் கேட்கின்றோம். கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட எமது தளபதிகள் தொடர்பில் நாங்கள் கேட்கின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவர் சிவானந்தன் ஜெனிதா தெரிவித்தார்.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...