Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வடக்கில் உலாவரும் மைத்திரி! மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்கிறார்

T

The Leader Desk

பிப்ரவரி 21, 2022 • 3:39 AM

வடக்கில் உலாவரும் மைத்திரி! மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்கிறார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
  • எமது கட்சியில் சிறியவர் பெரியவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை அனைவரையும் சமமாக பார்ப்பது எங்களது சுதந்திரக் கட்சி.
  • ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்காக அந்தக் கட்சியின் யாழ் அமைப்பாளர் அங்கஜன் ராமநாதன் தலைமையில் வடக்கில் பல கூட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்காக அந்தக் கட்சியின் யாழ் அமைப்பாளர் அங்கஜன் ராமநாதன் தலைமையில் வடக்கில் பல கூட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் வடக்கு பயணத்தை மையப்படுத்தி இந்தக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் நடந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தார்.

''சுதந்திரக் கட்சியானது ஏனைய கட்சிகளை விட ஒரு சிறந்த கட்சி. எமது கட்சியில் சிறியவர் பெரியவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை அனைவரையும் சமமாக பார்ப்பது எங்களது சுதந்திரக் கட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கில் அதாவது தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு அதிகூடிய ஆசனங்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கின்றது வரலாற்றில் ஒரு முக்கியமான விடயமாகும்.

 

அதற்கு நான் அனைத்து உடுப்பிட்டி தொகுதி மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் அத்தோடு எதிர்வரும் காலத்தில் எமது கட்சிக்கு அதாவது மாகாணசபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் எமது கட்சியை பலப்படுத்துவதற்கு அதிகளவில் மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்.

எமக்கு ஆதரவு அளித்தால் நல்ல நிலைக்கு முன்நோக்கி கொண்டு செல்வோம் தற்போது நாட்டில் மக்கள் அதிகளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் எரிவாயு, பசளை,அத்தியாவசிய பொருள் விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.'' என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் தலைமைத்துவத்துவம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிடையாது தெற்கு அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வடக்கில் உலாவரும் மைத்திரி! மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்கிறார் | Tamil Leader | We Lead the Nation