Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நான்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் பணி நீக்கம்!

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2022 • 5:47 AM

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நான்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் பணி நீக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற ஜெனரல் கே.பி.
  • ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துமிந்த நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சமிந்த குலரத்ன 20 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு அரசாங்க பதவிகளில் இருந்தவர் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நிர்வாக மற்றும் இராஜதந்திர அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:


ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற ஜெனரல் கே.பி. எகொடவெல அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு போக்குவரத்துப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியை சந்திக்க வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்காமை உள்ளிட்ட பல்வேறு நிர்வாக குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த இராணுவ அதிகாரி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் பொது முறைப்பாடுகள் பிரிவின் மேலதிக செயலாளரும் நீக்கப்பட்டுள்ளார். புதிய மேலதிக செயலாளராக நிஷாந்த வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துமிந்த நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சமிந்த குலரத்ன, அரசாங்கத்தின் பிரதம கொறடாவின் பாராளுமன்ற செயலாளராகவும் பணியாற்றுகிறார்.

சமிந்த குலரத்ன 20 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு அரசாங்க பதவிகளில் இருந்தவர் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நிர்வாக மற்றும் இராஜதந்திர அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.


https://bit.ly/3uHGkH

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நான்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் பணி நீக்கம்! | Tamil Leader | We Lead the Nation