Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கையொப்பம்!

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2022 • 2:36 PM

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கையொப்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் போது கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது கையொப்பத்தைப் பதிவு செய்திருந்தார்.
  • இந்த சட்டத்தை கொண்டுவந்த போது இது ஆறு மாதங்களுக்கு மட்டுமே தற்காலிகமானது என்று கூறப்பட்டது, ஆனால் நாற்பத்தி இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
  • “பயங்கரவாதச் சட்டத்தை ஒரு பயங்கரமான செயல் என்று வர்ணிக்கலாம்.
எழுத்து அளவு:

இந்த பொது மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும்  தனது  கையொப்பத்தை பதிவு செய்துள்ளார். இந்த மனுவில் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று (18)கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்டது  முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தனும் நேற்று [18] அவரது இல்லத்தில் கையெழுத்திட்டார்.

பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதற்கான மனுவில் கையொப்பமிடும் பிரச்சாரம் முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தில் பெப்ரவரி 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.பின்னர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கும் இதனை கொண்டு செல்ல இலங்கைத் தமிழ் அரசு கச்சி இளைஞர் முன்னணி நடவடிக்கை மேற்கொண்டது. 

அண்மையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பெருந்தொகையான மக்களிடம் குறித்த எதிர்ப்பு மனுவில் கையொப்பம் சேகரிக்கப்பட்டது.

இதன் போது கொழும்பு  பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது கையொப்பத்தைப் பதிவு செய்திருந்தார்.

 “பயங்கரவாதச் சட்டத்தை ஒரு பயங்கரமான செயல் என்று வர்ணிக்கலாம். இந்த சட்டத்தை கொண்டுவந்த போது இது ஆறு மாதங்களுக்கு மட்டுமே தற்காலிகமானது என்று கூறப்பட்டது, ஆனால் நாற்பத்தி இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தமிழ் இளைஞர்களை கட்டுப்படுத்துவதற்கு இது பயன்படுத்தப்பட்டுள்ளது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.


https://bit.ly/3uHGkH

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கையொப்பம்! | Tamil Leader | We Lead the Nation