Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அமைச்சுக்களின் பணியை இலகுபடுத்தவே இராஜாங்க அமைச்சுக்கள் - ஜனாதிபதி

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2022 • 7:40 AM

அமைச்சுக்களின் பணியை இலகுபடுத்தவே இராஜாங்க அமைச்சுக்கள் - ஜனாதிபதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சில அமைச்சுக்களின் விவகாரங்கள் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
  • இராஜாங்க அமைச்சர்களின் அமைச்சுக்கள் விடயங்களை இலகுபடுத்துவதற்காகவே வர்த்தமானி மூலம் ஒதுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இது தொடர்பில் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.
  • இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:


சில அமைச்சுக்களின் விவகாரங்கள் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.


இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சின் செயலாளரை கூட தமது அதிகாரிகளால் சந்திக்க முடியாத நிலை காணப்படுவதாக வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இதன் போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.


இராஜாங்க அமைச்சர்களின் அமைச்சுக்கள் விடயங்களை இலகுபடுத்துவதற்காகவே வர்த்தமானி மூலம் ஒதுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இது தொடர்பில் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.


அமைச்சர்களுக்கும் இடையில் மட்டுமன்றி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடையேயும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலும் பல அமைச்சர்களும் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.


https://bit.ly/3uHGkH

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...