Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அப்பாவிகளைச் சிறையில் அடைக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதற்கு? பேராயர் கேள்வி

T

The Leader Desk

பிப்ரவரி 18, 2022 • 1:59 PM

அப்பாவிகளைச் சிறையில் அடைக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதற்கு? பேராயர் கேள்வி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தப்பவிட்டு அப்பாவிகளையே ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
  • அதனால்தான் இன்று நாம் சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கின்றோம் எனவும் அவர் இதன் போது அவர் கூறினார்.
  • பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுத்தி மக்களிடம் மனுவில் கையெழுத்துப் பெறும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதில் கையெழுத்திட்டுள்ள கொழும்பு பேராயர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
எழுத்து அளவு:


இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தப்பவிட்டு அப்பாவிகளையே ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுத்தி மக்களிடம் மனுவில் கையெழுத்துப் பெறும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதில் கையெழுத்திட்டுள்ள கொழும்பு பேராயர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.


“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை” என்றார்.


குற்றவாளிகளைத் தப்பிவிட்டு அப்பாவிகளைச் சிறையில் அடைத்தால் எப்படி நீதி கிடைக்கும்? அதனால்தான் இன்று நாம் சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கின்றோம் எனவும் அவர் இதன் போது அவர் கூறினார்.


"இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடெங்கும் வாழும் மக்கள் பலர் துன்பங்களைச் சந்தித்துள்ளனர். அப்பாவிகளைச் சிறையில் அடைக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதற்கு? எனவே, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக மாற்றப்பட வேண்டும். இதை வலியுறுத்தியே அதற்கான மனுவில் நான் கையெழுத்திட்டுள்ளேன்” என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.


https://bit.ly/3uHGkH

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...