Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து அதிக சொத்து பறிமுதல்

T

The Leader Desk

பிப்ரவரி 18, 2022 • 2:49 AM

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து அதிக சொத்து பறிமுதல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தெமட்டகொட ருவானிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மொத்த பெறுமதி 790 மில்லியன் ரூபா என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • தமக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு 50 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்க சந்தேக நபர் முயன்றதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
  • சந்தேகநபர் 2011ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் மூலம் சட்டவிரோத வியாபாரத்தை ஆரம்பித்து 2017ஆம் ஆண்டு முதல் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
  • இவரிடமிருந்து 90 மில்லியன் ரூபா, பெறுமதியான 09 அதி சொகுசு வாகனங்கள் தற்போது அரச உடைமையாக்கப் பட்டுள்ளன.
எழுத்து அளவு:


தெமட்டகொட ருவானிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மொத்த பெறுமதி 790 மில்லியன் ரூபா என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


தமக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு 50 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்க சந்தேக நபர் முயன்றதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர் 2011ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் மூலம் சட்டவிரோத வியாபாரத்தை ஆரம்பித்து 2017ஆம் ஆண்டு முதல் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரிடமிருந்து 90 மில்லியன் ரூபா, பெறுமதியான 09 அதி சொகுசு வாகனங்கள் தற்போது அரச உடைமையாக்கப் பட்டுள்ளன.
மொத்தம் 90 மில்லியன் ரூபா, பெறுமதியான 03 சேமிப்பு கணக்குகளை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இத்தோடு 20 மில்லியன் ரூபா பெறுமதியான 1.5 கிலோ தங்கம் மற்றும் 160 மில்லியன் ரூபா, பெறுமதியான மூன்று நிலங்களையும் நபரிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவருக்கு சொந்தமான பல விடுதிகளிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வெலே சுதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 180 மில்லியன் ரூபா இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிகூடிய பெறுமதியான சொத்துகளாகக் கருதப்பட்டது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...