Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பகுதி நேர வகுப்பு கழிவறையில் நவீன கமரா பொருத்திய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2022 • 3:00 PM

 பகுதி நேர வகுப்பு கழிவறையில் நவீன கமரா பொருத்திய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் கம்ப நீதவான் மஞ்சுளா கருணாரத்னவிடம் இன்று மாலை அறிக்கை சமர்ப்பித்தனர்.
  • இந்நிலையில் கல்வி நிறுவன உரிமையாளர், நிறுவனத்தை நடத்திச்செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 15 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக கம்பஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
  • ஆம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஒருவரின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

இந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் கம்ப நீதவான் மஞ்சுளா கருணாரத்னவிடம் இன்று மாலை அறிக்கை சமர்ப்பித்தனர். 2023 ஆம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஒருவரின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் க.பொ.த உயர்தர பகுதி நேர வகுப்புகளுக்குச் சென்ற போது அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்திய சந்தர்ப்பத்தில் கழிவறையில் கமரா பொருத்தப்பட்டிருப்பதை அவதானித்ததாகத் தனது நண்பிகளிடம் முறைப்பாடு செய்தவரின் மகள் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த தனியார் கல்வி நிறுவனத்தை நடத்தும் நபரின் தாயார் கழிவறையிலிருந்த கமராவை அகற்றியதை மாணவர்கள் பார்த்ததோடு, பெற்றோருக்கு இது தொடர்பில் தகவல் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து கல்வி நிறுவனத்தை நடத்திச்செல்பவரின் மனைவியினால் பின்னர் கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த கமரா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த கமராவை பொருத்தியவர் யார் என்பது முறைப்பாடு செய்தவர்களுக்குத் தெரியாத நிலையில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு கோரி முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்வி நிறுவன உரிமையாளர், நிறுவனத்தை நடத்திச்செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 15 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக கம்பஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். எனினும், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹா மேயர் எரங்க சேனாநாயக்கவும் இன்று காலை சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைத்தொலைப்போசி அல்லது கணினியில் காட்சிகளை நேரடியாகப் பார்க்கும் வகையில் இந்த நவீன கமரா பொருத்தப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸ், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துவரும் நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பகுதி நேர வகுப்பு கழிவறையில் நவீன கமரா பொருத்திய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு | Tamil Leader | We Lead the Nation