Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘இலங்கைக்கான நம்பிக்கை’ - வாரிசை பிரதமராக்கும் முயற்சியில் மகிந்த

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2022 • 5:34 AM

‘இலங்கைக்கான நம்பிக்கை’ - வாரிசை பிரதமராக்கும் முயற்சியில் மகிந்த

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூரண ஆசீர்வாதத்துடன் அனைத்து இராஜாங்க அமைச்சர்களையும் ஒருங்கிணைத்து அமுல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு ‘இலங்கைக்கான நம்பிக்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • பசில் ராஜபக்ஷ எப்போது பிரச்சினை வந்தாலும் நாட்டை விட்டு ஓடிவிடுவார் என்பதால் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இப்போதே தயாராகுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அண்மையில் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
  • இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்புமனுவை உறுதிப்படுத்தும் நோக்கில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடளாவிய ரீதியில் கூட்டத் தொடரையும் பொஹொட்டுக் கட்சிக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தார்.
  • அதன் அங்குரார்ப்பண கூட்டம் கடந்த 9ஆம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெற்றது.
எழுத்து அளவு:


பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூரண ஆசீர்வாதத்துடன் அனைத்து இராஜாங்க அமைச்சர்களையும் ஒருங்கிணைத்து அமுல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு ‘இலங்கைக்கான நம்பிக்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தென் மாகாணத்தில் மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த பிரச்சாரத்தில் கடந்த இரண்டு வருடங்களில் அரச அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவிபடுத்தப்பட உள்ளது.


நாமல் ராஜபக்சவை பிரதமராக்குவதே ‘ஸ்ரீலங்கா ஹோப்’ திட்டத்தின் பிரதான நோக்கம் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


நாமல் ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்கியதன் பின்னர் இந்த வருட இறுதியில் அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக பிரதமர் தனது நெருங்கிய நண்பர்கள் குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.


பசில் ராஜபக்ஷ எப்போது பிரச்சினை வந்தாலும் நாட்டை விட்டு ஓடிவிடுவார் என்பதால் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இப்போதே தயாராகுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அண்மையில் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்புமனுவை உறுதிப்படுத்தும் நோக்கில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடளாவிய ரீதியில் கூட்டத் தொடரையும் பொஹொட்டுக் கட்சிக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். அதன் அங்குரார்ப்பண கூட்டம் கடந்த 9ஆம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெற்றது.


இதன் பின்னணியில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது புதிய அரசியல் திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘இலங்கைக்கான நம்பிக்கை’ - வாரிசை பிரதமராக்கும் முயற்சியில் மகிந்த | Tamil Leader | We Lead the Nation