Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஊடகவியலாளர்கள் தாக்குதல் : ஐ.நாவில் பதிலளிக்க இலங்கை தயாராக வேண்டும் - ருவான் விஜேவர்தன

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2022 • 4:38 AM

 ஊடகவியலாளர்கள் தாக்குதல் : ஐ.நாவில் பதிலளிக்க இலங்கை தயாராக வேண்டும் - ருவான் விஜேவர்தன

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் துன்புறுத்தல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுகளில் இலங்கை சில கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  • அத்தோடு எந்த ஒரு நாடும் இலங்கைக்கு உதவ வராது.
  • ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு மீதான தாக்குதல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்கவின் கைது தொடர்பிலும் அடுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கு பதிலளிக்க இலங்கை தயாராக வேண்டும் எனவும் விஜேவர்தன எச்சரித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் துன்புறுத்தல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுகளில் இலங்கை சில கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு மீதான தாக்குதல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்கவின் கைது தொடர்பிலும் அடுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கு பதிலளிக்க இலங்கை தயாராக வேண்டும் எனவும் விஜேவர்தன எச்சரித்துள்ளார்.

சமுதித சமரவிக்ரம தொடர்பான சம்பவங்கள் மற்றும் ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டதன் மூலம் இலங்கை ஜனநாயகம் இல்லாத நாடாக சர்வதேசத்தில் அறியப்படும். இவ்வாறானதொரு சமிக்ஞை உலகம் முழுவதும் பரவல் அடையும் போது எந்தவொரு முதலீட்டாளர்களும் நாட்டுக்கு வரமாட்டார்கள். அத்தோடு எந்த ஒரு நாடும் இலங்கைக்கு உதவ வராது.

அந்நிய செலாவணி சிக்கலைத் தீர்க்க எங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பிற நாடுகளின் உதவிகள் எப்போதும் தேவை,” என்று அவர் மேலும் கூறினார். "மக்களின் உரிமைகளை மீற வேண்டாம் என்று பொலிஸாரிடமும் மற்றும் அரச ஊழியர்களிடமும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்.

அவ்வாறு செயற்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பொலிஸாரும் அரச ஊழியர்களும்தான் சிரமப்படுவார்கள்,'' என்றார். எனவே கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதோடு இந்த நோக்கத்தில் தமது கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

 


https://bit.ly/3uHGkH

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...