Tamil Leader News
முக்கியம்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●
செய்திகள்

பாகிஸ்தானுடன் இரு நாடுகள் இணைந்து அமெரிக்காவுடன் புதிய ‘குவாட்' கூட்டமைப்பு உருவாக்கம்!

T

The Leader Desk

ஜூலை 18, 2021 • 6:11 AM

பாகிஸ்தானுடன் இரு நாடுகள் இணைந்து  அமெரிக்காவுடன் புதிய ‘குவாட்' கூட்டமைப்பு உருவாக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
  • உள்நாட்டு போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்து அந்நாட்டு ராணுவத்துக்கு உதவி புரிந்து வந்தன.
  • இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 4 நாடுகள் இணைந்து புதிய ‘குவாட்' கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
  • இதற்கு முன் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டமைப்பை உருவாக்கியதும், இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா முன்வைக்கும் சவால்களை ஓர் அணியாக இணைந்து எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா பெரும் பக்கபலமாக இருந்து வந்தது.

உள்நாட்டு போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்து அந்நாட்டு ராணுவத்துக்கு உதவி புரிந்து வந்தன.

இந்த சூழலில் தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறி வருகின்றன.

கிட்டத்தட்ட முழு படைகளும் வெளியேறிவிட்ட நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 4 நாடுகள் இணைந்து புதிய ‘குவாட்' கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

‘குவாட்' எனப்படுவது நான்கு தரப்பு பாதுகாப்பு கூட்டணியாகும். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆப்கானிஸ்தானின் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை பிராந்திய இணைப்புக்கு முக்கியமானவை என்று பிராந்திய நட்பு நாடுகள் (அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான்) கருதுகின்றன. எனவே ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க பிராந்திய நட்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

மேலும் வளர்ந்து வரும் பிராந்திய வர்த்தக பாதைகளை திறப்பதற்கான வரலாற்று வாய்ப்பைக் உணர்ந்து, வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்கும், போக்குவரத்து இணைப்புகளை உருவாக்குவதற்கும், வணிகத்தில் இருந்து வணிக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பிராந்திய நட்பு நாடுகள் ஒத்துழைக்க விரும்புகின்றன.

அதன்படி பரஸ்பர ஒருமித்த கருத்துடன் இந்த ஒத்துழைப்பின் முறைகளை தீர்மானிக்க வரும் மாதங்களில் பிராந்திய நட்பு நாடுகள் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டமைப்பை உருவாக்கியதும், இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா முன்வைக்கும் சவால்களை ஓர் அணியாக இணைந்து எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாகிஸ்தானுடன் இரு நாடுகள் இணைந்து அமெரிக்காவுடன் புதிய ‘குவாட்' கூட்டமைப்பு உருவாக்கம்! | Tamil Leader | We Lead the Nation