Tamil Leader News
முக்கியம்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●
செய்திகள்

இலங்கை அரசாங்கம் தனது "போலி தேசியவாத" கொள்கையை மாற்ற வேண்டும்! மனோ கணேசன்

T

The Leader Desk

ஜூலை 17, 2021 • 12:29 PM

இலங்கை அரசாங்கம் தனது  "போலி தேசியவாத" கொள்கையை மாற்ற வேண்டும்! மனோ கணேசன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
  • தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவை தொடர்பில் உலகத்துக்கு கொடுத்த உறுதி மொழிகளை நிலை நாட்ட முன் வர வேண்டும்.
  • அவரது கருத்து சரியென்றபோதும், இலங்கை அரசாங்கம், உலக நாடுகளுக்குத் தந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவை பற்றிய உறுதிமொழிகளைக் காப்பாற்றுகின்றதா என்பதை நிதியமைச்சர் பெசில் சந்தித்த தூதுவர்களும் உறுதி செய்து விட்டு, இலங்கை அரசுக்கு உதவ முன்வர வேண்டும்.
எழுத்து அளவு:

இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது,

புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜேர்மனி, பிரித்தானிய தூதுவர்களை அவசரமாகச் சந்தித்து, எமதுநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்றும் அதற்கு இந்த தூதுவர்கள் உதவ வேண்டுமெனவும் கூறுகிறார்.

அவரது கருத்து சரியென்றபோதும், இலங்கை அரசாங்கம், உலக நாடுகளுக்குத் தந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள்,  சட்டத்தின் ஆட்சி ஆகியவை பற்றிய உறுதிமொழிகளைக் காப்பாற்றுகின்றதா என்பதை நிதியமைச்சர்  பெசில் சந்தித்த  தூதுவர்களும் உறுதி செய்து விட்டு, இலங்கை அரசுக்கு உதவ முன்வர வேண்டும்.

அதைவிடுத்து விட்டு, தங்கள் சொந்த நலன்களுக்காக, தமிழ் பேசும் மக்களின் தோள்களில் சவாரி ஓட இனியும் முயலக் கூடாது. உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு தமிழ் மக்களைத் தள்ளி விட வேண்டாம்.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என, இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து “வன் பெல்ட்-வன் ரோட்”  என்ற சீனாவின் பட்டுப்பாதையில் தமிழ் மக்களும் பயணிக்கும் நிலைமையை உருவாக்கிட வேண்டாம்.

புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவும், ஜனாதிபதியும் பிரதமரும் தொட்டதுக்கு எல்லாம் போலி தேசியவாதம் பேசி, நாடு பறி போகிறது என்று கூறி, சிங்கள இனம், பெளத்த மதம் ஆகிய இரண்டையும் இழுத்து விடும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள்,  சட்டத்தின் ஆட்சி ஆகியவை தொடர்பில் உலகத்துக்கு கொடுத்த உறுதி மொழிகளை நிலை நாட்ட முன் வர வேண்டும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க இலங்கை மக்களின் மனங்களை வெல்ல முயன்றால் இலங்கை நாட்டை நோக்கி  முதலீடுகள் குவியும்.

மேற்குறிப்பிட்ட தூதுவர்களுக்கும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இந்த செய்தியின் மொழிபெயர்ப்பு இவர்கள் கவனத்துக்கு போகும் என எனக்கு தெரியும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க இலங்கை மக்களை இந்த அரசாங்கம் நியாயமாக நடத்துகிறதா என தேடி பாருங்கள். தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள்,  சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உறுதி செய்யச் சொல்லுங்கள். உங்கள் சொந்த நலன்களுக்காக தமிழ் மக்களை இனியும் பயன்படுத்த முயல வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...