Tamil Leader News
முக்கியம்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●
செய்திகள்

அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

ஜூலை 17, 2021 • 11:53 AM

அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய மாக்சிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் இலங்கை ஆசிரியர் சங்கம், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்களின் பங்களிப்புடன் வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
  • இதில் பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கெண்டிருந்தனர்.
  • குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும், விலையேற்றத்தை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
எழுத்து அளவு:

புதிய மாக்சிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் இலங்கை ஆசிரியர் சங்கம், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்களின் பங்களிப்புடன் வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், 'அரசே பொருட்களின் விலையேற்றத்தை உடனே நிறுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், போராடும் மக்கள் மீது பொலிஸாரை ஏவாதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, இலங்கையின் கடல் வளத்தை அழிப்பதற்கு துணை போகாதே, உரத்தடையை நீக்கு, விவசாயிகளுக்கு உடன் தீர்வு தா, பெண்கள் மீதான சுமைகளை அகற்று, அந்நிய வல்லரசுகளின் ஆதிகாரத்திற்கு இடமளிக்காதே' உள்ளிட்ட சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும், விலையேற்றத்தை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கெண்டிருந்தனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...