கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கப்பல்துறையை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்குப் பதிலாக மேற்கு கப்பல்துறையை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் கருத்தைக் கேட்டுள்ளது.

இந்த ஆலோசனைக்கு அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கப்பல்துறையை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவின் அதானி நிறுவனத்தையும் இணைத்துக் கொண்டு, அந்நிறுவனத்திற்கு 49% பங்கை வழங்க அரசாங்கம் முடிவு செய்திருப்பது சம்பந்தமாக தோன்றியுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கத் தரப்பு பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டு வருகிறது.

இந்த ஆலோசனைக்கு அரசாங்கத்திற்குச் சார்பான தொழிற் சங்கங்களை இணங்கச் செய்வதற்காக பஸில் ராஜபக்‌ஷவும், ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவும் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி