Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மன்னார் இரட்டைக் கொலை: இதுவரை நால்வர் கைது

T

The Leader Desk

ஜனவரி 20, 2025 • 9:24 AM

மன்னார் இரட்டைக் கொலை: இதுவரை நால்வர் கைது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • கடந்த 16ஆம் திகதி மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்ததுடன், அவர்களில் இருவர் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
  • மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக மன்னார் நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஒரு குழுவினரே துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்.
  • அந்த சம்பவம் தொடர்பான விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் 16ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளது.
எழுத்து அளவு:

சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அவரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியும் அவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய இரண்டு சந்தேக நபர்களில் அடம்பன் பகுதியில் முன்னர் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 16ஆம் திகதி மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்ததுடன், அவர்களில் இருவர் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக மன்னார் நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஒரு குழுவினரே துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்.

மோட்டார் சைக்கிளில் பிரதேவசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

உயிலங்குளம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருவதாகவும், 2022 ஆம் ஆண்டில் இரண்டு கொலைகளும் 2023 ஆம் ஆண்டில் இரண்டு கொலைகளும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

10.06.2022 அன்று, உயிலங்குளம் பகுதியில் திருக்கல் போட்டியொன்று இடம்பெற்றுள்ளதுடன், அங்கு நடந்த ஒரு சம்பவத்தைத் அடிப்படையாக கொண்டு  இரண்டு சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவம் தொடர்பான விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் 16ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...