Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘மஹிந்தவை வெளியேற்ற அரசாங்கம் சதி’

T

The Leader Desk

ஜனவரி 20, 2025 • 9:12 AM

‘மஹிந்தவை வெளியேற்ற அரசாங்கம் சதி’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கம் சதி செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.
  • முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது குடியிருப்புக்கு 4.6 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இன்று மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
  • களுத்துறை கட்டுகுருந்தவில் நடந்த கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான வாடகை மாதத்திற்கு 4.6 மில்லியன் ரூபாய்கள் என்றார்.
எழுத்து அளவு:

அரசாங்கம் சதி செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த  தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது குடியிருப்புக்கு 4.6 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இன்று மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதியை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை. ஜனாதிபதிகள் பொதுவாக முன்னாள் ஜனாதிபதிகளை தனிப்பட்ட முறையில் பழிவாங்க மாட்டார்கள்” என்றார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்யும் அதேவேளையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

களுத்துறை கட்டுகுருந்தவில் நடந்த கூட்டம் ஒன்றில்  கருத்து தெரிவித்த அவர்,   முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான வாடகை மாதத்திற்கு 4.6 மில்லியன் ரூபாய்கள் என்றார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் அல்லது தாம் தங்கியிருக்கும் வீடுகளுக்கான வாடகையை அவர்களே செலுத்த வேண்டும்.

தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் ஒரு குடியிருப்பு அல்லது அவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைப் பெறுவதற்கு உரிமை உண்டு.

அவர்களுக்கான உதவி கொடுப்பனவை அரசாங்கம் 30,000 ரூபாயாக கட்டுப்படுத்தும், இது அவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்காகும் என்றும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை தவிர அனைத்து அமைச்சர்களின் விடுதிகளும் ஹோட்டல் திட்டங்கள் அல்லது பிற பொருத்தமான பயன்பாடுகளுக்கு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...