Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஜனாதிபதியுடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு: 2 முக்கிய விடயங்கள் பற்றி பேச்சு

T

The Leader Desk

டிசம்பர் 13, 2023 • 1:46 PM

ஜனாதிபதியுடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு: 2 முக்கிய விடயங்கள் பற்றி பேச்சு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பண்ணையாளர்களின் 90ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டு இன்று நானும், எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் ஜனாதிபதியை நாடாளுமன்றத்தில் சந்தித்து முக்கியமான இரு விடயங்களைப் பற்றி உரையாடினோம்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.
  • “அத்துடன், போராட்டத்தில் ஈடுபடும் எமது மக்கள் 90 நாட்களாகவும் போராட்டத்தைத் தொடர்கின்றனர் என்பதைப் பற்றியும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம்.
  • “இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை ஜனாதிபதிக்கு வழங்கி, அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோரினோம்.
எழுத்து அளவு:

பண்ணையாளர்களின் 90ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டு இன்று நானும், எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் ஜனாதிபதியை நாடாளுமன்றத்தில் சந்தித்து முக்கியமான இரு விடயங்களைப் பற்றி உரையாடினோம்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இந்தச் சந்திப்பின்போது, மயிலத்தமடு - மாதவனைப் பகுதியில் தொடர்ச்சியாக மாடுகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற புகைப்படங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததுடன் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் பிரதிகளையும் வழங்கினோம்.

“அத்துடன், போராட்டத்தில் ஈடுபடும் எமது மக்கள் 90 நாட்களாகவும் போராட்டத்தைத் தொடர்கின்றனர் என்பதைப் பற்றியும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். ஜானாதிபதி கூறிய எந்தவொரு விடயத்தையும் இப்பிரச்சனைக்கான தீர்வாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெளிவுபடுத்தினோம்.

“இரண்டாவதாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கான விசாரணைகள் இடம்பெறுவதோடு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறிக் கொண்டாலும் அந்தச் சட்டத்தின் கீழ் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டோரை இன்றுவரை இனங்கண்டு கைது செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் ஜனாதிபதிக்குக் கூறினோம். உடனடியாக இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.

“இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை ஜனாதிபதிக்கு வழங்கி, அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோரினோம்.

“தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் எட்டப்படாதவிடத்தும் எதற்காக ஜனாதிபதியைச் சந்திக்கின்றீர்கள்? என மக்கள் கேள்விகள் எழுப்புகின்ற போது, எமது விருப்பு - வெறுப்புக்களை துறந்து ஜனாதிபதி, அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோரைச் சந்தித்தும், நீதிமன்றங்களை நாடியும் மக்களுக்கான தீர்வைப் பெறுவதே எமது அயராத முயற்சி என்பதைக் கூறிக்கொள்கின்றேன்.

“அத்துடன், மக்களுக்குச் சேவையாற்றவே மக்கள் எம்மைத் தெரிவு செய்துள்ளனர். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வாழ்வதற்கு அல்ல” என்று, சாணக்கியன் எம்.பி மேலும் கூறினார்.

(மாலைமுரசு)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதியுடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு: 2 முக்கிய விடயங்கள் பற்றி பேச்சு | Tamil Leader | We Lead the Nation