Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ரூ.2,000 சம்பளம் வழங்கவேண்டும்’

T

The Leader Desk

டிசம்பர் 10, 2023 • 4:30 AM

‘பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ரூ.2,000 சம்பளம் வழங்கவேண்டும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாளாந்த சம்பளம் 2000 ரூபாவாக வழங்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
  • “புதிய வரி கொள்கையில் விவசாய உபகரணங்களை உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டுமானால், உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும், ஆகவே விவசாய பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விதிப்பை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
  • “பொருளாதார பாதிப்பினால் பெருந்தோட்ட மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள், தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு மத்தியில் 1000 ரூபா சம்பளம் சாத்தியமற்றது.
  • ஆகவே தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 2000 ரூபா வழங்க வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நாளாந்த சம்பளம் 2000 ரூபாவாக வழங்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, உரம் தொடர்பில் கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானத்தால் ஏற்பட்ட விளைவுகளை குறுகிய காலத்துக்குள் சீரமைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

“பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள், நெற்பயிர்ச்செய்கை உட்பட மரக்கறி, பழ வகை பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் உர பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

“புதிய வரி கொள்கையில் விவசாய உபகரணங்களை உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டுமானால், உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும், ஆகவே விவசாய பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விதிப்பை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

“கடந்த அரசாங்கம் விவசாயத்துறை தொடர்பில் எடுத்த தவறான மூர்க்கத்தனமான தீர்மானத்தால் ஒட்டுமொத்த விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

“இதனால் ஏற்பட்ட விளைவுகளை குறுகிய காலத்துக்குள் சீர்படுத்த முடியாது, உர பற்றாக்குறையால் பெருந்தோட்டத் தொழிற்றுறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

“பொருளாதார பாதிப்பினால் பெருந்தோட்ட மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள், தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு மத்தியில் 1000 ரூபா சம்பளம் சாத்தியமற்றது. ஆகவே தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 2000 ரூபா வழங்க வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...