Tamil Leader News
முக்கியம்
பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●'கொபெய்கனே அழகி படுகொலை'யின் உண்மை; நவ. 12இல் ‘BLOOD LACED TEARS’ஆக வெளியீடு!●புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●சாஃப் கிண்ணக் கால்பந்து: இலங்கை - பூடான் போட்டி 2-2 என சமநிலையில் நிறைவு!●மான் தாக்கியதில் கைதி உயிரிழப்பு!●உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்; இன்று விசாரணை மீள ஆரம்பம்!●அநுராதபுர அபிவிருத்தி வர்த்தமானியும் இந்திய முதலீடும்: உண்மை நிலை என்ன?●
செய்திகள்

பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!

Menaka

Menaka

நவம்பர் 9, 2026 • 8:59 PM

பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட உரையின் போது கேட்கப்படும் பில்லியன்களsலான ரூபா வாக்குறுதிகள் உண்மையில் நிலத்தில் முளைக்கின்றனவா?
  • பில்லியன் ரூபா பெறுமதியான 36 வாக்குறுதிகள் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் ரூபாவைத் தாண்டிய பிரம்மாண்டமான திட்டங்கள் மற்றும் கொள்கை அடிப்படையிலான 36 முன்மொழிவுகள் இந்த விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
  • அதற்காக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை ஏறக்குறைய 212 பில்லியன் ரூபாவாகும்.
  • குறித்த பிரதான 36 வாக்குறுதிகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவீதமானவை முழுமையாகத் தரைமட்ட யதார்த்தமாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட உரையின் போது கேட்கப்படும் பில்லியன்களsலான ரூபா வாக்குறுதிகள் உண்மையில் நிலத்தில் முளைக்கின்றனவா? அல்லது அவை ஹான்சாட் (Hansard) அறிக்கைகளின் பக்கங்களுக்கு இடையில் கரைந்து போகின்றனவா?

இலங்கையின் அரச நிதி விவகாரங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் முன்னணித் சுயாதீன நிறுவனமான 'வெரிட்டே ரிேசர்ச்' (Verité Research) இன் "வரவு-செலவுத் திட்ட வாக்குறுதிகள்: நாடாளுமன்றத்திற்கு அப்பால்" எனும் புதிய மதிப்பீடு இது குறித்த பல சுவாரஸ்யமான உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

212 பில்லியன் ரூபா பெறுமதியான 36 வாக்குறுதிகள்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் ரூபாவைத் தாண்டிய பிரம்மாண்டமான திட்டங்கள் மற்றும் கொள்கை அடிப்படையிலான 36 முன்மொழிவுகள் இந்த விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை ஏறக்குறைய 212 பில்லியன் ரூபாவாகும்.

குறித்த பிரதான 36 வாக்குறுதிகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவீதமானவை முழுமையாகத் தரைமட்ட யதார்த்தமாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டுமுதல் இதுவரையான வருடாந்த மதிப்பீட்டு வரலாற்றை நோக்கும்போது, ஒரு ஆண்டில் பதிவான மிக உயர்ந்த வெற்றியும் இதுவேயாகும். 2024 ஆம் ஆண்டில் முன்மொழிவுகளில் 17 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடிந்திருந்தது.

குறுகிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட குறிப்பிடத்தக்க புரட்சி

பொதுவாக வருடாந்த வரவு-செலவுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரச இயந்திரத்திற்கு முழுமையான ஒரு வருடக் காலம் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டமையால், பணிகளுக்காகக் குறைந்தளவு காலமே கிடைத்தது.

அத்தகையதொரு பின்னணியிலும் கூட, ஒட்டுமொத்த முன்மொழிவுகளில் 41 சதவீதத்தை (15 முன்மொழிவுகள்) முழுமையாகவோ அல்லது மிகவும் திருப்திகரமான மட்டத்திலோ முன்னோக்கி நகர்த்த முடிந்துள்ளமை ஒரு சாதகமான முன்னறிவிப்பாகும்.

வரவு-செலவுத் திட்ட வாக்குறுதிகளில் 40% இன்னும் செயலாக்கம் பெறவில்லை

முன்னேற்றங்கள் காணப்பட்ட போதிலும், வினைத்திறன் தொடர்பில் இன்னும் கடுமையான கேள்விக்குறிகள் எஞ்சியுள்ளன.

பாரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்ட பிரதான முன்மொழிவுகளில் சுமார் 40 சதவீதமானவை (14 முன்மொழிவுகள்) இன்னும் குறிப்பிடத்தக்க மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் 7 முன்மொழிவுகள் (19 சதவீதம்) தொடர்பான முன்னேற்றங்களை அளவிடுவதற்கேற்ற போதுமான அரச தரவுகள் கிடைக்கப்பெறாததால், அவை "வெளிப்படுத்தப்படவில்லை" என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிப்படைத்தன்மையில் புதிய பாய்ச்சல்

அரச நிதிச் செலவினங்கள் தொடர்பான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதில் இம்முறை குறிப்பிடத்தக்க புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மு முன்மொழிவுகளில் மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகமானவை (64 சதவீதம்) "முழுமையான திறந்த" நிலையைக் கொண்டுள்ளன.

குறிப்பாக, 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக எந்தவொரு வரவு-செலவுத் திட்ட முன்மொழிவும் "தகவல் மறைக்கப்பட்ட" (Closed) வகைக்குள் உள்ளடக்கப்படாமை ஒரு சிறப்பம்சமாகும்.

அரச அதிகாரிகள் தகவல்களை வழங்குவதில் காட்டும் இந்த வெளிப்படைத்தன்மை, பொருளாதார நிர்வாகம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த ஒரு சிறந்த பலமாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...