பாடசாலை வயது வந்த மாணவர்களுக்கு இன்று சுகாதார நப்கின்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இதை எதிர்த்தனர்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில் இந்த திட்டத்தை நான் கூறியபோது கேலிசெய்தனர், ஆனால் அரசாங்கத்தின் திட்டத்தை அவர் பாராட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

வறுமை காரணமாக பெண்கள் இந்த பிரச்சினையில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றும் அவர்கள் கடுமையான நோய்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தலதா அத்துகோரல மற்றும் ரோகிணி காவிரத்னே, 

பெண்களுக்கான இலவச சுகாதார தயாரிப்புகளை வழங்கும் முதல் நாடு ஸ்காட்லாந்து. நாட்டின் நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய மசோதா, பெண்கள் சுகாதார பொருட்கள் தேவைப்படும் எவருக்கும் இலவசமாகப் பெற முடியும்.

இந்த வரலாற்று முடிவுக்கு பங்களித்த ஒரு பெண்ணாக இருப்பதில் பெருமைப்படுவதாக ஸ்காட்லாந்து பிரதமர் நிக்கோலா பெர்குசன்  அவரது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி