கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரி புத்தாண்டின் தொடக்கத்தில் மன்னாரில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் கடைசி நாளில் மன்னார் மாவட்ட செயலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட அனைத்து மதங்ளையும் சார்ந்தவர்கள் கலந்து கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.

முஸ்லிம்களின் மத உரிமையை மதிக்க வேண்டும், எங்கள் உடல்களை எரிக்க வேண்டாம்  அடக்கம் செய்வது எங்கள் உரிமை, உலக சுகாதார அமைப்பு பொய் சொல்கிறதா? சடலங்கள் மீதான இனவாதம் என்ற கோசங்களுடன் இந்த போராட்டத்தை சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் கூட்டணி மன்னார் குடிமக்கள் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

xcxc

இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதனும் கலந்துகொண்டிருந்தார்.

தகனம் செய்வது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க அரசாங்கம் மக்களை கட்டாயப்படுத்துகிறது என்றும் எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மன்னார் மாவட்ட செயலாளர் நந்தனி ஸ்டான்லி டி மெல் அவர்களிடம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்குமாறு ஒப்படைத்தனர்.

2020 டிசம்பர் 31 வியாழக்கிழமை தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் இடது முன்னணி, புதிய ஆண்டின் தொடக்கத்தில் தகனம் செய்வதை நிறுத்தாவிட்டால் முஸ்லிம்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க புத்தாண்டில் தினமும் போராட வேண்டியிருக்கும் என்று அரசாங்கத்தை எச்சரித்தது.

Prof Bahu

இதற்கிடையில், 500 க்கும் மேற்பட்ட இங்கிலாந்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டணியான பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில், தனது தகனக் கொள்கையை வாபஸ் பெறுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது, முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமைகளுக்காக வழக்குத் தொடர லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி