சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவின் முக்கிய பங்காளியாகும் இப்போது கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக செயற்பட அவர்கள் உள்ளக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதை 'திவயின இரிதா' செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளனர், அவர்களின் அலட்சியத்திற்கு அரசாங்கம் தீவிரமான பதிலை எடுக்க வேண்டும் என்று பெரும்பாண்மை ஒப்புக் கொண்டுள்ளதாக அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை முடிவை தாமதப்படுத்தியுள்ளது என்றும் ஆணைக்குழு இறுதி அறிக்கையின்படி மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் 'திவயின' செய்தித்தால் தெரிவிக்கின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறி சமகி ஜன பலவேகயவில் இணைந்து வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் பரந்த கூட்டணியில் போட்டியிடத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி