Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே காலத்தின் தேவை’

T

The Leader Desk

ஜனவரி 18, 2025 • 4:58 AM

‘சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே காலத்தின் தேவை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் (EU) வலியுறுத்தியுள்ளார்.
  • Carmen Moreno) உள்ளிட்ட குழுவினருக்கும் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (17) கொழும்பில் (Colombo) நடைபெற்றது.
  • இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தல குறித்த கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்ற சமநேரத்தில், ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக் கோரும் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
எழுத்து அளவு:

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் (EU) வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர் (Nacho SÁNCHEZ), ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ (H.E. Carmen Moreno) உள்ளிட்ட குழுவினருக்கும் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (17) கொழும்பில் (Colombo) நடைபெற்றது.

இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தல குறித்த கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்ற சமநேரத்தில், ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக் கோரும் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்தும் கோரப்பட்ட போது, உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு - கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான் சர்வதேச மட்டத்தில்  இலங்கை அரசும் சேர்ந்து ஒஸ்லோவில் இணங்கிக் கொண்ட இறுதி விடயம் என்ற அடிப்படையில் 13வது திருத்தச் சட்டத்துக்கும் சமஸ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள், 13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள் குறித்து உரையாடப்பட்டது.

மேலும் கனடா, சுவிஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஷ்டி முறைமையையும், இந்திய மாநில சுயாட்சி முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள் குறித்து சிறீதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தினார்.

இதேவேளை  தமது குழுவினால் தயாரிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கையின் பிரதி ஒன்றை, தமிழர் பிரதிநிதிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...