ரத்கம கடுதம்பே பொல்கஸ்துவ பகுதி விஹாரை ஒன்றில் மத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த தேரர் ரத்கம ஆற்றில் உயிரிழந்த நிலையில் தேரரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன. 

8 ஆம் தேதி மாலை துறவியின் சடலத்தை ரத்கம பொலிசார் கண்டுபிடித்தபோது, தேரரின் இரு பாதங்களும் டயர் ஒன்றில் கட்டப்பட்டும் கொங்கிறீட் தூண் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த நிலையில் ரத்கம ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

6 ஆம் திகதி முதல் ஆரண்ய மடத்தில் இருந்து துறவியைக் காணவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துறவி யாரோ ஒருவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.



சுமார் 59 வயதுடைய இந்த துறவி சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துறவியின் கொலை தொடர்பாக காலி தலைமை நீதவான் ஹர்ஷனா கெகுனவெல நேற்று (09) காலை மஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் விசாரணை நடத்தியுள்ளார்.

காலி கராபிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவ அதிகாரி, ஜானகி வருஷாவிதானவும் சம்பவ இடத்திற்கு சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாக அறியக்கிடைக்கின்றது.


தெற்குக்கு பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி ரொஷன் சில்வா உள்ளிட்ட மூன்று பொலிஸ் குழுக்களின் தலைமையில் கொலை தேரரின் கொலை குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி