பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, பெண்கள் அதிகமாக துணைவரினால் வன்முறைக்குட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதைய கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், பெண்கள் மற்றும் சிறுமிகளை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கும் அவர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பெண்களுக்கு எதிரான, வன்முறைக்கு எதிராக அவசரமாக பிரச்சாரம் மேற்கொள்ள 16 நாட்கள் அவசியமாவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

”கொரோனா தொற்றின் வெளிப்படுகையும் பரவலும் விஷேடமாக பெண்களையும் சிறுமிகளையும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் ஆபத்தை அதிகரித்துள்ளது.”

உலகளவில், உலகளாவியரீதியில் மூன்றில் ஒரு பெண் உடலியல் மற்றும்/அல்லது பாலியல் வன்முறையை அவளின் வாழ்நாளில் ஒருதடவையாவது அனுபவிக்கிறாள், பெரும்பாலும் பெண்கள் அதிகமாக துணைவரினால் வன்முறைக்குட்படுத்தப்படுவதாக டிசம்பர் 9 புதன்கிழமை அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு அறிக்கையில், தென்கிழக்கு ஆசியாவில் கணிக்கப்பட்ட பெறுமானம், ஐந்தில் இரண்டு பெண்கள், அல்லது கிட்டத்தட்ட 40%ற்கு அதிகமாக காணப்படுகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காயங்கள், உடல், மன, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், எச்.ஐ.வி மற்றும் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் மற்றும் மனநல பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகளைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் வெளிப்படுகையும் பரவலும் விஷேடமாக பெண்களையும் சிறுமிகளையும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் ஆபத்தை அதிககரித்துள்ளது.

"பயணக் கட்டுப்பாடுகள் பெண்களுக்கான சேவைகளையும் நண்பர்களையும் அடைவது கடினம், மேலும் அவர்கள் குற்றவாளிகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டியிருக்கும்."

வாழ்வாதரத்தை இழப்பதனால் பெண்கள் விகிதாசாரமற்ற ரீதியில் பாதிக்கப்படுகின்றனர், பொருளாதாரரீதியான பாதிப்புக்குள்ளாகும் மற்றும் தங்கியிருக்கும் தன்மையை அதிகரிக்கின்றனர்.

அவசர தொலைத்தொடர்புகள், பாதுகாப்பிடங்கள் மற்றும் சட்ட உதவி போன்ற வன்முறைகளுக்கு பதிலளிக்கும் சமூக பாதுகாப்பு சேவைகள் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக பாதுகாப்பு சேவைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளில், இந்த தீவிரமானபொது சுகாதார பிரச்சினைக்கு தீர்வு காண பிராந்தியத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா பதில் செயலின்போது புதிய அல்லது உயர்ந்த பாலின-உணர்திறன் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் உறுப்பு நாடுகளை பாராட்டுவதோடு, பல முக்கிய துறைகளில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி