கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில் இன்றைய வழக்கில் அது சாதகமாக இருக்கும் என தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஸாத் சாலி தெரிவித்தார். தமது உறவினர்களின் சடலங்களை எரிப்பதற்கு அவர்களின் உறவினர்கள் கையெழுத்திடாமல் மறுத்து வரும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாகவும் பலாத்காரமாக கையெழுத்து பெற பொலிஸார் முயல்வதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்கவேண்டாம். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கான ஆவணத்தில் முஸ்லிம்கள் யாரும் ஒப்பமிடக் கூடாது.

அட்டுலுகம பிரதேசத்தில் மக்கள் பீ.சீ,ஆர். பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்கும் வகையில் மறைந்து வருவதுடன் அவர்கள் பொய் முகவரிகளை அதிகாரிகளுக்கு வழங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்றார். மக்கள் அச்சத்தில் இவ்வாறு பீ.சீ.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளாமல் மறைந்து வருகின்றனர்.

பீ.சீ,ஆர். பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்கவேண்டாம். அதற்காக உரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளாமல் நாங்கள் மறைந்திருந்தால், அதனை காரணம் காட்டி முழு குடும்பத்தையும் தனிமைப்படுத்தும் நிலை இருக்கின்றது. பீ.சீ.ஆர். பரிசோதனையை தவிர்கும் வகையில் யாராவது மறைந்திருந்தால் அவர்களின் வீடுகளை சீல் வைத்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி