இலங்கையில் நேற்று (28) கொரோனாவினால் 8 பேர் இறந்துள்ளனர் . கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 107க அதிகரித்துள்ளது.

கொழும்பு 13ல் வசித்த 87 வயதுடைய ஒரு பெண், தெமட்டகொடையில் வசித்த 54 வயதுடைய ஒரு பெண், மருதானையில் வசித்த 78 வயதுடைய ஒரு பெண், 58 வயதுடைய இன்னொரு பெண் என்ற வகையில் 4 பேர் மரணித்துள்ளதுடன், கொழும்பு 14ல் வசித்த 36 வயதுடைய ஒருவர், கொழும்பு 2ல் வசித்த 83 வயதுடைய ஒருவர், கொழும்பு 13ல் வசித்த 69 வயதுடைய ஒருவர், மகஸின் சிறைச்சாலையில் 70 வயதுடைய ஒரு கைதி ஆகியோரையும் சேர்த்து 8 பேர் நேற்று மரணித்துள்ளனர்.

இவர்கள் நவம்பர் 23லிருந்து நேற்று வரை மரணித்தவர்களாகுமென சுகாதாரப் பிரிவு கூறுகிறது. என்றாலும் இவர்களில் 5 பேர் வீட்டிலேய மரணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் இருக்கும் போது சுகவீனமடையும் நபர்களை கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணும் பரிசோதனை முறையொன்றை அரசாங்கம் இதுவர வினைத்திறனுடன் செயற்படுத்தாமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது வரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை உழைப்பாளிகளில் 100க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளபோதிலும் அவர்களை இந்நாட்டிற்கு அழைத்து வர இதுவரை அவசர நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
வெளிநாட்டிலுல்ல இலங்கை நோயாளர்களை மரணிக்க விட்டுள்ளதாகவும் மக்கள் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி