Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

நிதி அமைச்சின் அறிவுறுத்தல் கிடைத்த பின்னர்தான் மின் கட்டணத் திருத்தம்

T

The Leader Desk

ஜனவரி 17, 2025 • 12:47 PM

நிதி அமைச்சின் அறிவுறுத்தல் கிடைத்த பின்னர்தான் மின்  கட்டணத் திருத்தம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தத்தை நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்க தீர்மானித்திருந்தது.
  • அதேபோல் இந்த மின்சார கட்டண திருத்தத்தின்படி, வீட்டுப் பிரிவிற்கான மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதத்தாலும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 21 சதவீதத்தாலும் குறைக்க தீர்மானித்திருந்தது.
  • உணவகங்களுக்கு 31 சதவீதமும், தொழில்துறைக்கு 30 சதவீதமும் மற்றும் பொது நோக்கத்திற்கான மின்சாரக் கட்டணங்களை 12% குறைக்கவும் தீர்மானித்திருந்தது.
எழுத்து அளவு:

அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தத்தை நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை  இன்று வௌியிட்ட நிலையில்,  இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்களை குறைக்க தீர்மானித்திருந்தது.

அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்க தீர்மானித்திருந்தது.

அதேபோல் இந்த மின்சார கட்டண திருத்தத்தின்படி, வீட்டுப் பிரிவிற்கான மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதத்தாலும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 21 சதவீதத்தாலும் குறைக்க தீர்மானித்திருந்தது.

உணவகங்களுக்கு 31 சதவீதமும், தொழில்துறைக்கு 30 சதவீதமும் மற்றும் பொது நோக்கத்திற்கான மின்சாரக் கட்டணங்களை 12% குறைக்கவும் தீர்மானித்திருந்தது.

அரசு நிறுவனங்களுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தாலும் மற்றும் தெரு விளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்து.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...