கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிகிச்சையின்றி அல்லது மேலதிகாரிகளின் கவனயீனத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வெளிநாடு சென்ற இலங்கையர்களில் இதுவரை 95 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் கூறுகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் மத்தியக் கிழக்கு நாடுகளில் முறையான சிகிச்சையின்றியும் பராமரிப்பின்றியும் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடவசதி இல்லையெனக் கூறி, நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் இப்படி கவனிப்பாரற்று விடப்படுவதனால் கொரோனா நோய் மற்றும் மாரடைப்பு போன்றவற்றால் அல்லல்பட்டு இறப்பவர்கள் சம்பந்தமாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இலங்கையின் தேசிய வருமானத்தில் வருடாந்தம் 7 பில்லியனுக்கு அதிகமான வருமானத்தை தேடித் தரும் வெளிநாட்டுப் பணியாளர்களை. விசேடமாக மத்தியக் கிழக்கு நாடுகளில் பணியாற்றும் வீட்டுப் பணிப்பெண்களை இந்நாட்டிற்கு வரவழைக்காமை சம்பந்தமாக அவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின் முன்பாக அழுது புலம்பிய போதிலும், அவர்களை ‘வெளிநாட்டு வீரர்’ என முத்திரை குத்தினார்களேயன்றி அவர்களி கண்ணீரைத் துடைக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் முன்வரவில்லை என்பதுதான் பிரச்சினை.

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களை, அரேபிய நாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு அனுப்பப்படும் ‘தற்கொலைக் குண்டுகள்” என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியது, இந்த இலங்கையர்களை இந்நாட்டிற்கு அழைத்து வருவதில் ஏற்படும் செலவீனத்தை குறைப்பதற்குத்தான். இப்போது கூட அவ்வாறு வரவழைக்கப்படும் இலங்கையரிடமிருந்து லட்சக் கணக்கில் அறவிடுவது விமானங்களில் சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காவே எனக் கூறப்படுகிறது.

அவ்வாறு வரவழைப்பவர்களை தனிமைப்படுத்துவதற்காக நிலையங்கள் இல்லையென காரணம் கூறப்படுகிறது. தொற்று நோய் காலத்தில் கொரோனா நிதியம் போன்றவற்றிற்கு பெருமளவு நிதி சேர்ந்தாலும், வெளிநாட்டு செலாவணியை பெற்றுத் தரும் இலங்கையர்களுக்காக அந்த நிதியிலிருந்து எந்தப் பணமும் ஒதுக்கப்படவில்லை. இதுவரை 1600 கோடிக்கும் மேற்பட்ட தொகை நிதியத்திற்கு சேர்ந்துள்ளது. அதிலிருந்து 400 கோடி மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி