மேல் மாகாணத்திலிருந்து யாரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளி மாகாணங்கள் எதற்கும் செல்ல முடியாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் இந்தத் தடை எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை நடைமுறைப்படுத்தப்படும்.

மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கான ரயில் சேவைகளும் இன்றிரவுடன் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேல்மாகாணத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேல்மாகாணத்தில் பெருமளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web