நேற்று முன்தினம் (31) பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய நபரின் மரணத்தை கொரோனா மரணமாக கருத்திற் கொள்ளாமல் இருக்க தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.

தற்கொலை செய்துக் கொண்ட குறித்த இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த மரணம் கொவிட் 19 வைரஸினால் ஏற்படாத காரணத்தால் இளைஞனின் மரணத்தை கொவிட் மரணங்களின் எண்ணிக்கையுடன் சேர்க்காமல் இருக்க தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.

குறித்த இளைஞனுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 என்று தொற்று நோய் விஞ்ஞான பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த மரணம் கொரோனா மரணமாக ஏற்றுக் கொள்ளப்படாத காரணத்தால், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 21 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி