வரலாற்றில் கல்லெறியப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஊடக சமூகத்தையும், நீதியை மதிக்கும் சுதந்திர ஊடக இயக்கம் அரசாங்கத்திடம் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

நவம்பர் 2 ம் திகதி ஊடகவியளார்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஒழிப்புக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் சுதந்திர ஊடக இயக்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்குவது எந்தவொரு அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தபோதிலும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு குற்றத்திற்குக் கூட நீதி கிடைக்காத வரலாறே காணப்படுவதாக 'சுதந்திர ஊடக இயக்கம்' கவலை தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சீதா ரஞ்சனி மற்றும் செயலாளர் லசந்தா டி சில்வா ஆகியோரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான இரண்டு குற்றச் சம்பவங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதியைக் கொண்டுவரும் போலிக்காரணத்தின் கீழ் கடந்த ஆட்சியின் போது பல சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தொடங்கியிருந்தாலும், அந்த விசாரணைகள் தற்போது  மெதுவாகவே நடைபெறுகின்றன. 

இலங்கை  வரலாற்றில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான இரண்டு குற்றச்சம்பவங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

தர்மரத்னம் சிவராம் கொலை வழக்கு மற்றும் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒரு சாட்சி நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணித்தார்,அவர் இப்போது புதிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கலுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராகி, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த நிலைமை வழக்கில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தின் கருத்துப்படி, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லா நேரத்திலும் உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் ஊடக சமூகத்திற்கு ஒருபோதும் நீதியை வழங்கவில்லை என அந்த இயக்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி