Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மன்னார் துப்பாக்கிச்சூடு: பின்னணியில் 2022 இரட்டைப் படுகொலை

T

The Leader Desk

ஜனவரி 16, 2025 • 2:12 PM

மன்னார் துப்பாக்கிச்சூடு: பின்னணியில் 2022 இரட்டைப் படுகொலை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
  • மன்னார், நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவேரியன் அருள் (வயது 61) மற்றும் செல்வக்குமார் யூட் (வயது - 42) ஆகியோரே உயிரிழந்தனர்.
  • வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில், படுகாயமடைந்தவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். மன்னார், நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவேரியன் அருள் (வயது 61) மற்றும் செல்வக்குமார் யூட் (வயது - 42) ஆகியோரே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

உயிரிழந்த இருவரும், படுகாயமடைந்த ஆண் ஒருவரும் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற இருந்த வழக்கு விசாரணைகளுக்காக வருகைதந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றார் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டைப் படுகொலையைத் தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில் இவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...