Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘இலங்கைத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கரிசனை குறைந்துள்ளது’

T

The Leader Desk

ஜனவரி 16, 2025 • 2:05 PM

‘இலங்கைத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கரிசனை குறைந்துள்ளது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை தமிழர்கள் தீர்வு விடயத்தில், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகிறது.
  • வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறை வாள்வெட்டு கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

இலங்கை தமிழர்கள் தீர்வு விடயத்தில், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகிறது. அத்தனைக் காலம் தேவையில்லை. ஏற்கனவே இனங்கிக்கொண்ட விடயத்துக்கு இவ்வளவு காலம் தேவையில்லை. காலத்தை இழுத்தடிப்பது, அதை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டம்” என்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் கூறியதாவது,

“உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரசினை எழுந்துள்ளது. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறை வாள்வெட்டு கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது.

“மன்னாரில் இன்று நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டிற்கு நல்லதல்ல.

“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. “இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம்” என்று வந்தவர்கள், இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களும் இலஞ்சத்துக்கு துணைபோனவர்களாகத் தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகிறோம், முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள். இல்லையேல் தீங்களும் ஊழல்வாதிகள் தான்.

“தமிழரசு தலைமை தொடர்பிலும் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ச.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பேசி வருகின்ற விடயம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி மத்திய குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்” என்று, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘இலங்கைத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கரிசனை குறைந்துள்ளது’ | Tamil Leader | We Lead the Nation